ETV Bharat / state

'சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழும்'

காலநிலை மாற்ற இயக்கத்தை அறிவித்திருப்பதன் மூலம் சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்
author img

By

Published : Aug 14, 2021, 2:25 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 13) நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கை சூழலியல் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை வரவேற்பைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், உலக பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, சுவாமிநாதன் அறக்கட்டளையில் 'காலநிலை மாற்றம் தான் மானுடத்தின் பெரும் சவால்' என்று முதலமைச்சர் ஸ்டாலினின் உரை என அடுத்தடுத்த நிகழ்வுகளின் பின்னணியில் காலநிலை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்றைய நிதிநிலை அறிக்கையில் வந்துள்ளது.

பசுமை இயக்கம்

முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு 'காலநிலை மாற்ற இயக்கம்' 500 கோடியில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்படும் என்கிற அறிவிப்பு காலத்தின் மிக முக்கியமான தேவை. வரக்கூடிய காலங்களில் காலநிலை மாற்றத்திற்கு என ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்று நம்புகிறோம்.

வனத் துறை, ஆளில்லா விமானங்கள், நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, புவிசார் தகவல் அமைப்பு உள்ளிட்டவற்றை கொண்டு நவீனமாக்கப்படும் என்கிற அறிவிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அதுவும் காடுகள் இயற்கையில் உள்ள 'கார்பன் சிங்க்', அவற்றை பாதுகாப்பது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

மேலும் கரோனா போன்ற பெருந்தொற்று பரவுவதற்கு காடுகள் அழிக்கப்படுவதுதான் முக்கியமான காரணம் என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிப்பதற்கு மக்கள் பங்களிப்புடன் இந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை நடுவதற்கு 'பசுமை இயக்க' அறிவிப்பும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் பூவுலகு போன்ற அமைப்புகளுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்துக

காற்று மாசு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி வரும் சூழலில், சூழல் மாசு ஏற்படுத்தும் அனைத்து வாயுக்களையும் நுண் துகள்களையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் மற்றும் முன்கூட்டியே அறிவிக்கும் 'கண்காணிப்பு ஸ்டூடியோ' இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து பாதுகாக்கும் வகையில் 'சதுப்பு நில பாதுகாப்பு இயக்கம்' தொடங்கப்பட்டு முதலில் 100 சதுப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு அதை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 150 கோடிகளை ஒதுக்கி இருப்பதும் வரவேற்கவேண்டிய அம்சமாகும்.

திடக்கழிவு மேலாண்மையை நடைமுறைப்படுத்துவதற்கு 'குப்பையை' தொடக்கத்திலேயே தரம்பிரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் 'மாசற்ற நகரங்களை' உருவாக்க பயன்படும். 17 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி புதிதாக நிறுவப்படும் என்கிற அறிவிப்பில், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம்

ராணுவ போர் ஆயுதங்கள் தொழிற்பேட்டை, தூத்துக்குடியில் புதிய உப்பகற்றி ஆலைகள், பெரிய மேம்பாலங்கள், 1000 தடுப்பணைகள் போன்ற அறிவிப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள என்பதால் இந்த அறிவிப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

சூழலியல் பார்வையில் இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியிருந்தாலும் இந்த நிதிநிலை அறிக்கை நல்ல தொடக்கம். இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைகளில் 'காலநிலை மாற்றம்' என்கிற வார்த்தையே இல்லாதபோது, தமிழ்நாடு அரசின் இந்த நிதிநிலை அறிக்கையில் தனியான இயக்கம் தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் வரவேற்கப்பட வேண்டியவை" எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.