சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் ஒரு மனிதனிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத ஒரு சொத்து எது என்றால், கல்வி என்ற சொத்து தான், யாராலும் பறிக்க முடியாது என்றார்.
ஆன்மிகவாதியாக இருந்தாலும் - மதத்தில் சீர்திருத்தம் பேசியவர் தான் தயானந்தா. மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்தக் காலத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர் தயானந்தா என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மாணவ, மாணவியரும் உண்மையுடனும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர வேண்டும் எனத் தெரிவித்தார்.