ETV Bharat / state

மின்சார கோபுரத்தில் ஊழியர் தற்கொலை

author img

By

Published : Jul 21, 2021, 11:39 PM IST

சென்னை: நங்கநல்லூரில் உள்ள 33 அடி உயர மின்சார கோபுரத்தில் மின்சார நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

thaRkolai
thaRkolai

சென்னையை அடுத்த உள்ளகரம் கருணாநிதி நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் (46). இவர் கிண்டி ராஜ்பவனில் மின்சார வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அவர் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி தராததால் கோதண்டராமன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் நங்கநல்லூர் 100 அடி சாலையில் உள்ள 33 அடி உயர மின்சார கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை கண்ட பொதுமக்கள் பழவந்தாங்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று மின்சார கோபுரத்தில் தூக்கில் தொங்கிய கோதண்டராமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோதண்டராமன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரித்துவருகின்ற்னார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.