ETV Bharat / state

மழையால் மின்சார கேபிளில் பற்றி எரிந்த தீ...!

சென்னை: நங்கநல்லூரில் பலத்த சத்தத்துடன் மின்சார கேபிள்கள் ஒன்றோடு ஒன்று உரசி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் இரவு முழுக்க மிசாரம் துண்டிக்கப்பட்டது.

electricity-fire-in-chennai-nanganallurelectricity-fire-in-chennai-nanganallur
electricity-fire-in-chennai-nanganallur
author img

By

Published : Sep 15, 2020, 5:14 PM IST

சென்னை ஆலந்தூர் அடுத்த நங்கநல்லூர் எஸ்பிஐ காலனியில் நேற்று (செப்டம்பர் 14) இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மின்சார கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த மின்சார கேபிளில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மின்சார வசதி இன்றி இருந்தது.

மழையால் மின்சார கேபிளில் பற்றி எரிந்த தீ

பின்னர், இன்று (செப்டம்பர் 15) காலையில் இருந்து மின்சார ஊழியர்கள் மின் கம்பங்களில் எரிந்த கேபிள்களுக்கு மாற்றாக புதிய கேபிள்களை மாற்றி சரிசெய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்ய மாதிரி சட்டமன்றத்தை கூட்டிய மாணவர் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.