ETV Bharat / state

மின் இணைப்புகளின் பெயர் மாற்ற லஞ்சம்கேட்ட விவகாரம் - மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது

லஞ்சப் பணம் பாக்கியை வாங்கும்போது வீடியோவில் சிக்கிய சோழிங்கநல்லூர் முன்னாள் மின்வாரிய உதவி பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மின் இணைப்புகளின் பெயர் மாற்ற தடை :மின் வாரிய உதவி பொறியாளர் கைது

author img

By

Published : Mar 13, 2022, 10:47 PM IST

சென்னை: சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமாக 24 குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்புகளை, தனது மனைவி சரஸ்வதி பெயரில் பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், புதிய இணைப்புகளைப் பெறவும் மின்சார வாரியத்தை அணுகியுள்ளார்.

மின்சார வாரிய பொறியாளர் கேட்ட லஞ்சம்

அந்த அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு சோழிங்கநல்லூர் மின்சார வாரிய உதவிப்பொறியாளர் செந்தில் நாதன் என்பவரை அணுகியுள்ளார். பெயர் மாற்றம் செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.200 மற்றும் புதிய மின் இணைப்புக்கு ரூ.1600 செலுத்த வேண்டும் எனவும் அரசு நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், ஒவ்வொரு மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கும் ரூ.2500 லஞ்சமாகவும், புதிய இணைப்புகளுக்கு ரூ.6,500 லஞ்சமாக கொடுக்க வேண்டுமெனவும் உதவிப்பொறியாளர் நிர்பந்தித்துள்ளார்.

இவ்வளவு லஞ்சப் பணத்தைக் கொடுத்து மொத்தமாகப் பெயர் மாற்றம், புதிய இணைப்புகளைப் பெறமுடியாது என்ற அடிப்படையில் , 5 மின் இணைப்புகள் மட்டும் பெயர் மாற்றம் செய்யவும் 5 புதிய இணைப்புகளைப் பெறவும் ரமேஷ் முடிவு செய்தார். இதற்காக அரசு நிர்ணயித்த பணத்தையும் சோழிங்கநல்லூர் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் செலுத்தினார். மேலும், லஞ்சமாக ரூ.5000 பணத்தை உதவிப் பொறியாளர் செந்தில் நாதனுக்கு கொடுத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது

இதனையடுத்து, உதவிப்பொறியாளர் செந்தில்நாதன் 5 மின் இணைப்புகளில் பெயர் மாற்றத்தை மட்டும் செய்துள்ளார். புதிய மின் இணைப்புகள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக கேட்டபோது லஞ்சப்பணத்தில் பாக்கியை தந்தால் மட்டுமே, புதிய இணைப்புகள் தரப்படும் என உதவிப் பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ரமேஷ் தனது மகன் மகாதேவன் மூலம் பாக்கி உள்ள லஞ்சப் பணத்தைக் கொடுத்துவிடுமாறு தெரிவித்துள்ளார்.

மகாதேவன் தனது அலுவலகத்திற்கு உதவிப்பொறியாளர் செந்தில்நாதனை வரவைத்து லஞ்சப்பணத்தின் பாதியைக் கொடுக்கும்போது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ரமேஷ் மின்சார வாரியத்திடம் உதவிப்பொறியாளர் செந்தில்நாதன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த உடனேயே 2018ஆம் ஆண்டு 5 புதிய மின் இணைப்புகளை ரமேஷுக்கு உதவிப்பொறியாளர் செந்தில் நாதன் வழங்கியுள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோழிங்கநல்லூர் முன்னாள் உதவிப்பொறியாளர் செந்தில்நாதன் மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க:பனியில் 'கபடி' பாடி ரெய்டு வரும் படை வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.