ETV Bharat / state

மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை வெளியீடு! - மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Feb 28, 2020, 6:34 PM IST

Updated : Feb 28, 2020, 6:56 PM IST

தமிழ்நாட்டின் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அன்று முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில் வேட்புமனுக்கள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைகிறது. இந்த வேட்புமனுக்கள் 16ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை 18ஆம் தேதிவரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான வாக்குப்பதிவு மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த வாக்குகள் அதே நாள் மாலை 5 மணி முதல் எண்ணப்படுகிறன. மொத்தமாக தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் மார்ச் 30ஆம் தேதியாகும்.

மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் தேதி அறிவிப்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் தேதி அறிவிப்பு!

மேலும், இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகத்தின் செயலரை தேர்தல் அலுவலராகவும், சட்டப்பேரவை கூடுதல் செயலாளரை உதவி தேர்தல் அலுவலராகவும் நியமனம் செய்துள்ளது. வேட்புமனுக்களுடன் பிற ஆவணங்கள் சேர்த்து, தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் ஆகியோர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவு மார்ச் 26ஆம் தேதியன்று நடைபெறும்.

இதையும் படிங்க...ஈரானில் கொரோனா: தமிழ்நாடு மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

Last Updated : Feb 28, 2020, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.