ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாங்கள் செய்த செலவு கணக்கினை முறையாக உரிய படிவங்கள் மூலம் பராமரிக்கவேண்டும் என ஆணையத்தால் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கு நகலை தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள், சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டவர்களும் செலவு கணக்கினைத் தாக்கல் செய்யவேண்டும். தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது ஊராட்சி சட்டத்தின்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு, வருங்காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கபடும் என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு