ETV Bharat / state

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றால் மோடிக்கு குட்டு வைப்பார் - ஸ்டாலின்

சென்னை: தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களித்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று மோடிக்கு குட்டு வைப்பார். எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

pandian
author img

By

Published : Apr 6, 2019, 9:36 AM IST

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், சைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தா.பாண்டியன் கூறியதாவது, "ஸ்டாலின் கலைஞர் மறைவுக்கு பின் மிகுந்த அரசியல் முதிர்ச்சியோடு இந்த கூட்டணியை அமைத்துள்ளார். இக்கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த நாட்டை பிடித்த கேடு கெட்டவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டை மீட்கவே அமைந்துள்ளது.

அம்பானி மற்றும் அதானியிடம்தான் இந்த நாடே சிக்கி இருக்கிறது. இவர்கள் இருவர்களுக்கும் மோடி மற்றும் அமித்ஷாதான் நெருங்கிய நண்பர்கள். தற்போது உள்ள அரசு, கொள்ளையர்களை வைத்து கொள்ளையடிக்கவில்லை. அதிகாரிகளை வைத்து கொள்ளையடிக்கின்றனர்.

ஆனால் நம்முடைய கூட்டணி பொறுப்புள்ள கூட்டணி. எனவே தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களித்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று மோடிக்கு குட்டு வைப்பார். எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழச்சி என்கிற பெயருக்காகவே 10 ஆயிரம் வாக்குகள் விழ வேண்டும்" என்று அவர் கூறினார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பொதுக்கூட்டம் நாடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், சைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய தா.பாண்டியன், "டெல்லியிலும், தமிழகத்திலும் இருப்பவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கு ஏற்ப 24 மணிநேரத்தில் 12 மணி நேரம் எடுப்பது 12 மணி நேரம் அடுப்பது, பதுக்குவது என இருநேது வருகின்றனர். 

இங்கு கூடியிருக்கின்ற கூட்டம் டெல்லியில் யாரை அகற்ற வேண்டும் அதனால் இங்கு இருப்பவர்கள் தானாக உதிர்ந்து விடுவார்கள் என்ற விவரத்தை அறிந்தவர்கள்.

கலைஞர் மறைவுக்கு பின் மிகுந்த அரசியல் முதிர்ச்சியோடு இந்த கூட்டணியை அமைத்தார் எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ஸ்டாலின். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல இந்த நாட்டை பிடித்த கேடு கெட்டவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டை மீட்க கூடிய கூட்டம் என்று இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற குரலை எழுப்பியுள்ளார்.

ஆட்சியிலிருக்கும் 37 இடங்களில் 20 இடங்களை பலி கொடுத்துவிட்டு 20 இடங்களில் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு முன்னரே தான் வெற்றி பெற்ற தொகுதிகளில் தோற்று போனவர்கள் தான் அ.தி.மு.க.

கன்னியாகுமாரி வரை வெற்றி செய்திகளை எங்கும் கேட்க மாட்டீர்கள் குறிப்பாக சென்னையில் கேட்கவே மாட்டீர்கள்.

தமிழச்சி என்கிற பெயருக்காகவே 10 ஆயிரம் வாக்குகள் விழ வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் அதிக நீர் மேட்டூருக்கு வந்தது. அது கொசஸ்தலை ஆற்றில்ல கலந்து கடலுக்கு போனது. நீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த கேடுகெட்ட அரசு இன்னொரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கின்றனர். 

இவர்கள் திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாறாக பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைத்துள்ளனர்.

அம்பானி மற்றும் அதானியிடம் தான் இந்த நாடே சிக்கி இருக்கிறது. இவர்கள் இருவர்களும் மோடி மற்றும் அமித்ஷா வின் அதாம நண்பர்கள்.

அருணாச்சல் பிரதேசம் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வந்த மோடியின் வண்டியும் முதலமைச்சரின் வண்டியும் மோதிக் கொண்டது. அதனால் பழுது பார்க்க வண்டியை திறந்த போது அதால் 1 கோடி 80 லட்சம் பணம் இருந்துள்ளது. 

இவர்கள் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போது அங்கு தேர்தல் நடத்தலமா.

ஏழைகளுக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருந்தால் பணம் வரும். இந்த கூட்டணி பொறுப்புள்ள கூட்டணி.

ரபேல் ஊழல் பற்றி வெளியிட்ட புத்தகத்தை முடக்கினார்கள். பின்னர் தேர்தல் ஆணையத்தால் தடை நீக்கப்பட்டது. இவர்கள் கொள்ளையர்களை வைத்து கொள்ளை அடிக்கவில்லை. அதிகாரிகளை வைத்து கொள்ளையடிக்கின்றனர்.

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களித்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று மோடிக்கு குட்டு வைப்பார். எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.