ETV Bharat / state

இடைத்தேர்தலின்போது பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படும் - தலைமை தேர்தல் அலுவலர்

author img

By

Published : Sep 25, 2019, 6:17 PM IST

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

byelection

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு, "விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பதினெட்டு பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்புக் குழுக்களும் சேர்ந்து பணியாற்றவுள்ளன.

இந்தத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேனர் விவகாரங்களில் தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். இந்த தேர்தல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினருடன் வீடியோ கான்பிரன்சிங் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Intro:Body:நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை கலெக்டர்கள் பின்பற்றுவர்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சாஹு, தேர்தலுக்காக ஒட்டப்பட்ட 215 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், விக்கிரவாண்டி,நாங்குநேரியில் 18 பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்புக்குழுக்கள் 18ம், இந்த குழுவுடன் வீடியோ குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றுவர்கள் என்றும், பேனர் விவகாரங்களில் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதுவரை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளில் 2 பேர்மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடைபெறவுள்ளது. இவ்வாறு சாஹு  கூறினார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.