சென்னை தாம்பரத்தில் உள்ள சபாபதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவர் அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு காந்திசாலை வழியாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் வந்த லாரி முதியவர் மீது மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனிக்காத லாரி ஓட்டுநர், லாரியை இயக்கியதால், முதியவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் தலை நசுங்கி முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற லாரி ஓட்டுநரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறை நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (43) என்பது தெரியவந்தது.
இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, லாரி ஓட்டுநர் பழனியை கைதுசெய்து குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ’தேவையான நிவாரண உதவிகளை மக்களுக்கு செய்துதர வேண்டும்’ - ஸ்டாலின்