தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்று (ஜூன். 24) நடைபெற்றது. அவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு திமுக ஆட்சிக்கு வந்திருப்பது பெருமையாக இருகிறது.
கூட்டத்தொடரில் எட்டு வழி சாலைக்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது விவசாய விரோத எடப்பாடி அரசால் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவோம் என்றும் கூறினார்.
இதற்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதேவேளையில் தமிழ்நாடு அரசு எட்டு வழி சாலை திட்டத்தை கை விடுகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றி, திமுக அரசு என்றும் விவசாயிகள் பக்கம் நிற்கும் என்று நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி செல்போன், பணம் பறிப்பு!