ETV Bharat / state

எம்.பி.பி.எஸ் கட்ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி - கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண் குறைவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ் கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

author img

By

Published : Nov 2, 2021, 5:24 PM IST

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் 202 நகரங்களில் 3,858 மையங்களில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது.

நீட் 2021 நுழைவுத் தேர்வை 15 லட்சத்து 44 ஆயிரத்து 275 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தேசியத் தேர்வு முகமை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்களையும் அறிவித்துள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினை விட 2021ஆம் ஆண்டு நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் 2020ஆம் ஆண்டில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 406 மாணவர்கள் பெற்றனர்.

தகுதி மதிப்பெண்

நடப்பு ஆண்டில் 7 லட்சத்து 70 ஆயிரத்து 857 மாணவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

ஓபிசி பிரிவில் 66 ஆயிரத்து 978 பேரும், எஸ்.சி. பிரிவில் 22 ஆயிரத்து 384 பேரும், எஸ்.டி. பிரிவில் 9 ஆயிரத்து 312 பேரும் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், இவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் கடந்த ஆண்டைவிட குறைத்து தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் கட்ஆப் மதிப்பெண்
எம்.பி.பி.எஸ் கட்ஆஃப் மதிப்பெண்

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் கட்ஆஃப் மதிப்பெண்கள் உயருமா? என்பது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியதாவது, "நீட் தேர்வில் இயற்பியல் தேர்வுத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறையும் என எதிர்பார்த்தோம்.

தேர்ச்சி பெற்றதற்குக் காரணம்

ஆனால், மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதற்குக் காரணம், மீண்டும் தேர்வு எழுதிய மாணவர்களின் ஆதிக்கத்தைத் தான் காண்பிக்கிறது. முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள் இல்லாமல், 90 விழுக்காடு பேர் மீண்டும் தேர்வு எழுதியவர்கள் தான்.

எம்பிபிஎஸ் கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

கடந்த 2020 நீட் தேர்வில் 700 மதிப்பெண்களுக்கு மேல் 85 பேர் இருந்தனர். நடப்பாண்டில் 197 பேர் இடம் பெற்றுள்ளனர். 680 மதிப்பெண்களுக்கு 600 மாணவர்களும், நடப்பாண்டில் 905 மாணவர்களும் உள்ளனர்.

630 மதிப்பெண்களை 8,390 மாணவர்களும், நடப்பாண்டில் 8,395 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மாற்றங்கள் வர வாய்ப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் பெரியளவில் மாற்றங்கள் வர வாய்ப்புகள் கிடையாது. அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்குக் கடந்த ஆண்டின் நிலைதான். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு எழுதி தகுதி பெற்ற மாணவர்களுக்கு வரப்பிரசாதம். கடந்த ஆண்டு 2,747 இடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் இருந்தன.

நடப்பாண்டில் புதிய 11 மருத்துவக்கல்லூரிகள் வருவதால், 1,800 இடங்கள் கூடுதலாக வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் போக, 1,400 இடங்கள் பொது கலந்தாய்விற்கு வரும்.

தமிழ்நாட்டில் கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைவதற்குத்தான் அதிகமான வாய்ப்புகள் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : அதிமுக சார்பில் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.