ETV Bharat / state

பள்ளிக்கு வர வேண்டாம்... மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு!

author img

By

Published : Sep 5, 2021, 12:36 PM IST

காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

scl
பள்ளி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து, செப்.1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புவரை வகுப்புகள் நடந்துவருகின்றன.

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால், பள்ளி திறந்த ஓரிரு நாளிலே மாணவர்கள், ஆசிரியர்களை பதம் பார்க்கத் தொடங்கியது கரோனா தொற்று.

மாணவர்களை விரட்டும் கரோனா

நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேருக்கும், நெய்வேலியில் 2 ஆசிரியைகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் என பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இது மாணவர்களையும், பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிக்கு வர வேண்டாம்

இந்நிலையில், காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் , "பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் தொற்று பரவியிருக்கிறது என்ற தவறான தகவல் பரவியுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தொற்று பரவிவிடவில்லை.ஏற்கெனவே அவர்களுக்கு தொற்று இருந்து இருக்கிறது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரோட்டில் மாணவனுக்கு கரோனா... அரசு பள்ளி மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.