சென்னை: நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி பள்ளி கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் வழியாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவரும் அந்தந்த அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் நீட் பயிற்சிகளில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பு, இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை உருவாக்குக'