ETV Bharat / state

நல்ல முறையில் கேட்டாலே நிதி கிடைக்காது; போகிற போக்கில் கேட்டால் கிடைக்குமா? - எடப்பாடி பழனிசாமி பேச்சு..! - ADMK General Meeting

Edappadi Palaniswami: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியல் ஆளும் பாஐக ஆகிய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Edappadi Palaniswami speech in admk general council meeting chennai
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 5:57 PM IST

Updated : Dec 26, 2023, 9:00 PM IST

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று (டிச.26) அதிமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுக்குழு - செயற்குழு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “என்னை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்த தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், கழக பொது உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை முதலில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு அனைவரும் சிறப்பான முறையிலே கட்சிப் பணி ஆற்ற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலினுக்குத் தகுதியில்லை: ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரை மாநகரமே குலுங்குகிற அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு உங்களின் மகத்தான ஆதரவின் பேரிலே நடைபெற்று முடிந்தது. அதிமுக வரலாற்றிலேயே சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டு வெற்றி மாநாடாக நடத்திக் காட்டினோம்.

அந்த மாநாட்டைப் பற்றி இன்றைக்கு இருக்கின்ற விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார். அதிமுக மாநாட்டைப் போல எங்கள் மாநாடு இருக்காது, எடுத்துக்காட்டு மாநாடாகச் சேலத்தில் நடைபெறுகின்ற திமுக இளைஞரணி மாநில மாநாடு நடக்கும் என்றார்.

அவர் சொன்னது தான், மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு விட்டது அந்த மாநாடு. அதிமுகவை விமர்சிக்கின்ற பொழுதே இந்த பாதிப்பு உங்களுக்கு இருக்கின்றது. ஆகவே நாவடக்கம் தேவை. அரசியல் கற்றுக்குட்டியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

அது ஒரு வீர வரலாற்று மாநாடு, இனி எந்த கட்சியும் அந்த மாநாட்டை வெல்ல முடியாது. அந்த அளவிற்குச் சிறப்பாக அமைந்த மாநாடு. பேருந்துகள் கிடைக்கவில்லை, வாகனங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. வாகனங்கள் கிடைத்திருந்தால் மதுரையே தாங்கி இருக்காது. வாகனங்கள் கிடைக்காமல் செய்த அரசு தான் இந்த விடியா திமுக அரசு. முழுமையான வாகனங்கள் கிடைத்திருந்தால் இன்னும் 10 லட்சம் பேர் கூடுதலாக அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள். அதை பற்றி விமர்சனம் செய்யத் தகுதி இல்லை உதயநிதி ஸ்டாலினுக்கு.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக இயக்கம். இது உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவோ, ஒடுக்கவோ, முடக்கவோ முடியாது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தைத் துவங்கிய போது தீய சக்தி திமுகவை அழிப்பது தான் அதிமுகவின் முதல் கடமை என்று சொல்வார்கள்.

அவர் இருக்கின்ற வரை திமுகவினால் எழுந்திருக்க முடியவில்லை, அந்த அளவிற்கு அற்புதமான ஆட்சியைத் தந்தார்கள். அதற்குப் பிறகு புரட்சித் தலைவி அம்மா பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்கிடும் விதமாக சுமார் பதினைந்தரை ஆண்டுக் காலம் சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.

அதிமுக மக்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. அம்மா மறைவிற்குப் பிறகு சுமார் நான்கரை ஆண்டுக்காலம் உங்கள் துணையோடு சிறப்பான ஆட்சியைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தந்தோம். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்கின்ற வாக்குறுதியைச் சட்டமன்றத்திலேயே அம்மா அளித்தார்.

சோதனை மேல் சோதனை கண்ட கட்சி: அந்த வாக்குறுதியை நாம் அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. தமிழகத்திலும் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆனால் சோதனை மேல் சோதனைகள் கண்ட கட்சி அதிமுக ஒன்று தான்.

அத்தனை சோதனைகளையும் படிக்கட்டாக்கி வெற்றி கண்டது அதிமுக தான். எத்தனை வழக்குகள், அத்தனை வழக்குகளையும் கடந்து நீதி, தர்மம், உண்மை வென்றது இது தான் சரித்திரம். தீய சக்தி திமுக நம்மை எவ்வளவோ சீண்டிப் பார்க்கின்றது. இயக்கத்தை முடக்க எவ்வளவோ பாடுபடுகின்றனர். சி.வி.சண்முகம் குறிப்பிட்டதை போல எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் இணைந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து இயக்கத்தை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அத்தனையும் வென்று காட்டினோம்.

பொதுக்குழு நடைபெறுகின்ற போதெல்லாம் முகத்தில் ஒரு பதட்டத்துடன் நாம் சந்திப்போம். ஆனால் இந்த பொதுக்குழுவில் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. இருபெரும் தலைவர்களுடைய சக்தி நமக்கு வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திலும் நீதி வென்று விட்டது. அதேபோல தேர்தல் கமிஷனிலும் நமக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். தமிழகத்திலேயே அதிக தொண்டர் கொண்ட இயக்கம் அதிமுக. சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளனர்.

தமிழகத்திலேயே 30 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பெருமை நம்முடைய கட்சிக்குத் தான் இருக்கின்றது. வேறு எந்த கட்சியும் தமிழகத்தில் 30 ஆண்டுக் காலம் ஆண்ட கட்சி கிடையாது. 30 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. எம்ஜிஆர், அவருக்குப் பின்னர் அம்மா, அவருக்குப் பின்னர் அம்மாவினுடைய அரசு போட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள், அதன் மூலமாகத் தமிழகம் இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

கரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு விலைமதிப்பில்லா உயிர்களை காப்பாற்றிய அரசு அதிமுக அரசு. ஆக்கி வைத்த சாதத்தைச் சாப்பிடுவது போல நாம் அனைத்தும் செய்து வைத்தோம் ஆட்சி மாற்றம், விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சியிலே பல உயிர்களை இழந்திருக்கின்றோம்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது இன்றைய முதலமைச்சர், அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் சுமார் 520 அறிவிப்புகளை வெளியிட்டார். இதுவரை நிறைவேற்றப்பட்டதா...? இப்படி மக்களை ஏமாற்றி தந்திரமாக கொல்லைப்புறம் வாயிலாக ஆட்சியிலே அமர்ந்து கொண்டு செயலற்ற அரசாங்கமாக இன்று காட்சியளிக்கிறது. ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். அதனால் மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம்.

ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசு: இந்த ஆட்சியிலே சாதனை என்று சொன்னால் ஊழல் செய்வதிலே சாதனை. வேறு எதிலும் சாதனை கிடையாது. கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் திமுக அரசின் சாதனை. வேறு என்ன சாதனை செய்திருக்கிறார்கள். எல்லா துறையிலும் ஊழல். இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசாங்கம் என்றால் அது திமுக அரசாங்கம் தான். ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும் நம்முடைய இயக்கத்தைக் குறை சொல்லுவார். அதிமுக ஆட்சியில் தான் ஊழல் நடைபெற்றது என்று சொல்லி. எந்த ஆட்சியில் ஊழல் செய்து சிறையில் இருக்கின்றார்கள் என்று நாட்டு மக்கள் அறிவார்கள்.

அண்மையிலே ஒரு அமைச்சருக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது. இன்னும் பலபேருக்குத் தண்டனை கிடைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சட்டமன்றத்தில் முன்வரிசையில் அமர்ந்து கொண்டிருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் மக்களைப் பார்க்கவில்லை. நீதிமன்றத்தில் எப்போது தீர்ப்பு வரும் என்று எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பலபேர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.

இன்றைக்கு ஒரு அமைச்சர் ஐந்து மாதமாகச் சிறையில் உள்ளார். அவரை அமைச்சராகப் பார்ப்பதா, அமைச்சர் என்றால் ப்ரோட்டோகால் உள்ளது, கைதி என்றால் மற்ற கைதியோடு இருக்க வேண்டும். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கூறினார், சட்ட நெறி முறைப்படி நல்ல அரசாட்சி தர முதலமைச்சர் நினைத்தால் அவரை தார்மீக அடிப்படையில் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நீதிமன்றம் தெரிவித்த பின்னர் கூட அமைச்சரவையிலிருந்து விடுவிக்காததற்குக் காரணம்? விடுவித்தார்... இவரைப் பற்றி அவர் சொல்லி விடுவார், பின்னர் அவர் இடத்தில் முதலமைச்சர் போய் விடுவார். ஆகவே தான் இன்று வரை அதற்கு மவுனம் காக்கிறார்.

அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும்: மக்கள் எண்ணம் இன்றைக்குத் தெளிவாக உள்ளது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்து விட்டது. பேரிடர் காலத்திலே விவசாயிகளுடைய பயிர்கள் எல்லாம் மழையிலே மூழ்கி சேதம் அடைந்துவிட்டது. அதற்குத் தேவையான நிவாரணத்தை வழங்காத அரசு தான் விடியா திமுக அரசு. அதிமுக ஆட்சியில் பேரிடர் காலத்திலே இப்படிப்பட்ட சூழல் ஏற்படுகின்ற போது பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக நெற் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு சுமார் 87 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தோம். அதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்.

ஆனால் இந்த விடியா திமுக அரசு விவசாயிகளுக்கு வெறும் 13 ஆயிரத்து 500 தான் கொடுத்தார்கள். மேலும், திமுக அரசு விவசாயிகளை முறையாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இடம்பெறச்செய்யாததால் விவசாயிகளுக்கு அந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டப் பலன்களும் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் 17 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என சொல்லி இருந்தார்கள். அதைக் கூட குறைத்துக் கொடுத்த அரசாங்கம் தான் இந்த திமுக அரசு.

அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தது. அதைப் புயல் வேகத்தில் செயல்பட்டு புயல் வந்த சுவடே தெரியாமல் பணிகளை மேற்கொண்ட அரசாங்கம் அதிமுக. மிக்ஜாம் புயல் வந்த போது வெறும் மழை தான் பெய்தது காற்று அடிக்கவில்லை. வர்தா புயலின் போது புயல் காற்றால் கடுமையான சேதம். சென்னையில் மட்டும் 6 லட்சம் மரங்கள் சாய்ந்தது. அத்தனையும் முறையாக அகற்றினோம். இப்போது வெறும் மழை தான் பெய்தது. 350 மரங்கள் தான் சாய்ந்தது. இதைக்கூட இந்த திமுக அரசு திட்டமிட்டுச் செயல்படாததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 14ஆம் தேதியே அறிவித்துவிட்டது. இந்த அரசாங்கம் தூங்கிக் கொண்டிருந்த காரணத்தினாலே அங்கிருந்த மக்களெல்லாம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மிக்ஜாம் புயலை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மக்கள் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

முதலமைச்சர் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்: 19ஆம் தேதி எங்கே டெல்லி போகிறார். ஓட்டுப் போட்டு முதலமைச்சராக அமர வைத்த மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் டெல்லி போகிறார். நாட்டு மக்களைப் பார்க்காமல் வீட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அங்கே டெல்லியில் போய் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் அதிகமாகக் கடன் வாங்கி மக்களைக் கடன் சுமையில் ஆழ்த்தி விட்டார்கள் எனக்கூறி பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறி வல்லுநர்கள் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்தார்கள். 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் அந்த குழுவின் வேலை. ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்தது கிடையாது: 2007, 2008இல் மத்தியில் திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் தான் ஆட்சியிலிருந்தது. மாநிலத்தில் திமுக அரசு இருந்தது. அப்போது கனமழை பாதிப்பிற்கு ரூ.1,139 கோடி நிவாரணம் கேட்டார்கள் அப்போது வெறும் ரூ.142 கோடி தான் கொடுத்தார்கள். 2008, 2009 நிஷா புயல் பாதிப்பிற்கு ரூ.3,789 கோடி கேட்டார்கள், வெறும் ரூ.570 கோடி தான் கொடுத்தார்கள். இப்படிக் கேட்கிற நிதியெல்லாம் மத்திய அரசாங்கம் எந்த காலத்திலும் தமிழ்நாட்டிற்கு கொடுத்தது கிடையாது.

அதிமுக ஆட்சியிலும் அதே போலத் தான் 2011, 2012 ரூ.5ஆயிரத்து 248 கோடி நிவாரணத் தொகை கேட்டதற்கு மத்தியிலிருந்த காங்கிரஸ் வெறும் ரூ.500 கோடி தான் கொடுத்தார்கள். 2012, 2013 வறட்சி காலத்தில் ரூ.19 ஆயிரத்து 988 கோடி கேட்டதற்குக் காங்கிரஸ் வெறும் ரூ.655 கோடி தான் கொடுத்தார்கள். 2015, 2016 வெள்ளம் ரூ.25 ஆயிரத்து 910 கோடி கேட்டதற்கு பாஜக அரசாங்கம் கொடுத்தது ரூ.1,737 கோடி தான். 2016, 2017 வறட்சிக்கு ரூ.39 ஆயிரத்து 565 கோடி கேட்டதற்கு அவர்கள் விடுவித்த தொகை ரூ1,748 கோடி.

2016, 2017 வர்தா புயலின் போது கேட்ட நிதி ரூ.22 ஆயிரத்து 573 கோடி, மத்திய அரசு விடுவித்தது வெறும் ரூ.276 கோடி தான். 2017, 2018 ஒக்கி புயல் கனமழை காலகட்டத்தில் கேட்டது ரூ.9 ஆயிரத்து 302 கோடி, மத்திய அரசு விடுவித்தது ரூ.133 கோடி. 2018, 2019 கஜா புயல் டெல்டா மாவட்டத்தையே புரட்டிப் போட்டு விட்டுப் போய்விட்டது. கஜா புயல் பாதிப்பை நிவர்த்தி செய்யக் கேட்டது ரூ.14 ஆயிரத்து 899 கோடி, ஆனால் மத்திய அரசாங்கம் ரூ.1,146 கோடி தான் கொடுத்தது. 2020ஆம் ஆண்டு நிவர், புரவி என இரண்டு புயலின் போதுமே கேட்ட நிதியைக் கொடுக்கவில்லை.

மனிதாபிமானத்துடன் நிதி அளிக்க வேண்டும்: மத்தியிலே காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி மாற்றான் தாய் பிள்ளைகளைப் போலத் தான் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். மத்திய அரசு மனிதாபிமானத்துடன் மாநில அரசுக்கு நிதியை அளிக்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் அது தான் எங்களுடைய கொள்கை.

இந்தியா கூட்டணியில் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. அந்த கூட்டணியில் 19ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலேயே ஒரு புகைச்சல் வந்து விட்டது. அந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறுமாறு டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அதற்கு நிதிஷ்குமார் என்னுடைய பேச்சை மொழி பெயர்க்காதீர்கள், வேண்டுமென்றால் நீங்கள் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இப்பொழுதே புகையத் தொடங்கி விட்டது. தமிழ் தமிழ் என்று பேசும் முதலமைச்சர் அங்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.

சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுக் காலம் ஆகியும் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் வைத்த கோரிக்கை எதையும் நிறைவேற்றவில்லை. சிறுபான்மையின மக்கள் வாக்கு சிதறிவிடும் என்கின்ற அட்சத்தில் இன்று ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கின்றார்கள். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். மிக்ஜாம் புயலுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரும் கேட்கிறார் சக அமைச்சரும் கேட்கிறார்கள்.

நாகரீகம் இல்லாத அமைச்சர் உதயநிதி: ஆனால் உதயநிதி ஸ்டாலின் ஒருபடி முன்னே போய் உங்க அப்பன் வீட்டுச் சொத்தையா குடுக்குறீங்க என சொல்கிறார். எப்படிப் பேச வேண்டும் என ஒரு நாகரீகம் தெரியாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மக்கள் எப்படித் துன்பப்படுகிறார்கள். நீ எதை வேண்டுமானாலும் பேசி விடுவாய் அதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். நாம் கேட்கிற இடத்தில் இருக்கிறோம் அவர்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறார்கள். முறையாகக் கேட்டு நிவாரணத்தைப் பெற்று மக்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய வேண்டும்.

போற போக்கில் கேட்டால் எப்படிக் கிடைக்கும்: நல்ல முறையாகக் கேட்டாலே மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைக்காது. போற போக்கில் கேட்டால் எப்படி நிதி கிடைக்கும். இதெல்லாம் விளம்பரப்படுத்துவதற்காக. மக்களை ஏமாற்றுவதற்காக. திமுக நாடாளுமன்றத்தில் கேட்டு நிதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டைச் சொல்வதற்கு, இவர்கள் செய்த தவரை மற்றவர்கள் மீது பழி போட்டுத் தப்பிப்பதற்கு நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள். இந்த விடியா திமுக அரசு செயல்படாத காரணத்தினால் தான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்தின் மீது நிறையக் குறைகள் உள்ளது. செயலற்ற முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினாலே மக்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம்.

எழுதாத பேனாவை வைக்க 83 கோடி: உதயநிதி ஸ்டாலின், உங்க தாத்தாவுக்குப் பேனா வைப்பதற்குப் பணம் எங்கிருந்து வந்தது. எழுதாத பேனாவைக் கடலில் வைப்பதற்கு ரூ.83 கோடி. மக்கள் சாப்பாடு இல்லாமல், வீடு இழந்து, கால்நடைகளை இழந்து, விவசாயிகள் பயிர்களை இழந்து, உப்பளத்தில் தண்ணீரில் உப்பெல்லாம் கரைந்து, தொழிற்பேட்டையில் தொழில் செய்ய முடியாமல் இயந்திரங்கள் எல்லாம் பழுதடைந்து அவர்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த ஏக்கம் எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. கடலில் கொண்டு போய் 83 கோடிக்கு எழுதாத பேனா வைக்கிறீர்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டாகப் பேசி இருக்கிறார். மக்கள் துன்பத்தோடு இருக்கின்ற இந்த நேரத்திலுமா விளையாட வேண்டும். சென்னை மாநகரத்தில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த 42 கோடி நிதி ஒதுக்குகிறார்கள். யார் வீட்டுப் பணத்தை யாருக்குக் கொடுப்பது. மக்களுடைய வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவிடப்படுகிறது.

கஷ்டப்படுகிற மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவி செய்யவில்லை. அரசு பணத்திலே அவர்களது குடும்பத்திற்கு நினைவு பேனா வைக்கச் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், மேடையில் அமைந்திருக்கும் தலைமைக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறக்கின்ற புத்தாண்டு அதிமுகவிற்கு மகிழ்ச்சி ஆண்டாக இருக்கும். அனைவருக்கும் தை பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடைப்பிரதமன் பாயாசம் முதல் பீடா வரை.. கமகமத்த அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்!

Last Updated : Dec 26, 2023, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.