ETV Bharat / state

பிரதமர் வருகை எதிரொலி - போலீசாரின் கட்டுப்பாட்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - நாளை ரயில் சேவை தொடக்கம்

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

pm modi
பிரதமர் மோடி வருகை
author img

By

Published : Apr 7, 2023, 9:18 PM IST

சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 8) வருகிறார். பிற்பகல் 2:45 மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்துக்குச் செல்கிறார்.

மாலை 4 மணி அளவில் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து கார் மூலமாக சிவானந்தா சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார். அங்கு சென்னை - கோவை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 10 ஆவது நடைமேடையில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுவதால் 10, 11, 9, 8 ஆகிய 4 நடைமேடைகளிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது.

இந்த நடைமேடைகளுக்கு வரக்கூடிய ரயில்கள் வேறு நடைமேடைக்கு மாற்றி விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலை அர்ப்பணிக்கும் நிகழ்வில் சுமார் 3ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்க கூடிய ‘வந்தே பாரத்’ ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, ஐஎன்எஸ் அடையார் கடற்படை தளத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி வரும் வாகனத்தைக் கொண்டு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.