சென்னை: பல்லாவரம் பகுதியில் கீதா கஃபே என்ற தனியார் உணவகத்தை கடந்த 60 ஆண்டுகளாக மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் 6 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச்சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிடச்சென்றுள்ளார்.
முதலில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, அடுத்ததாக காரக்குழுப்பு சாப்பிடுவதற்காக சாதம் போட்டுவிட்டு காரக்குழம்பை சாதத்தின் மீது எடுத்து ஊற்றும்போது அதில் காது துடைப்பதற்காக பயன்படுத்தப்படும் பட்ஸ் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உணவுக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் எடுத்து போட்டுவிட்டு சாப்பிடவும் என்று அலட்சியமாக கூறியுள்ளார். இதேபோன்று தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் உணவகத்தில் நாள் கடந்த மாமிச உணவுகள், சுகாதாரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதும்; உணவில் வண்டு இருப்பதும்; அதே போல ஆவின் பாலில் ஈ இருப்பதும், பல்லி இருப்பதுமாக தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியிலே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முறையாக அனைத்து உணவகத்திலும் சென்று ஆய்வு செய்யாமல், மெத்தனப்போக்கில் இருப்பது இதற்குக்காரணம் எனவும், உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விருகம்பாக்கத்தில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேர் கைது