ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 09 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

E tv bharat Top 10 news
E tv bharat Top 10 news
author img

By

Published : Aug 9, 2020, 9:11 AM IST

கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

வானத்துக்கும் பூமிக்கும் குதித்த விஜயபாஸ்கர்: உதயநிதி ஸ்டாலின் காட்டமான ட்வீட்!

சென்னை: மக்கள் மரணத்தை மறைத்தவர்கள் மருத்துவர்களின் மரணத்தையும் மறைப்பதோடு, தொற்றால் இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் நிவாரணத்தை 25 லட்சமாகக் குறைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல்; மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத் திணறல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஏர் இந்தியா விபத்து: இறந்த விமானி அகிலேஷ் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் பிரசவம்!

கேரளாவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானிகளில் ஒருவரான அகிலேஷ் குமாரின் மனைவி இன்னும் 15 நாட்களில் குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். அகிலேஷ் குமாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான அதே ஆண்டில்தான் இணை விமானியாக ஏர் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது

ஸ்ரீநகர்: லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

’கரோனாவிலிருந்து 80 விழுக்காடு மக்கள் குணமடைந்து வருகின்றனர்’ - சுகாதாரத்துறை செயலர் தகவல்!

வேலூர்: தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 80 விழுக்காடு மக்கள் குணமடைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும்'

திருவாரூர்: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் 2 கோடியை நெருங்கும் கோவிட் -19 பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: உலக அளவில் கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பட்டப்பகலில் மூதாட்டியிடம் பணம் பறித்த கும்பல்!

சென்னை: ஏடிஎம் மையத்தில் 10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து அடையாளம் தெரியாத கும்பல் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமராக பதவியேற்கவுள்ள மகிந்த ராஜபக்சவை சந்தித்து வாழ்த்திய இந்திய தூதர்!

கொழும்பு: இலங்கை பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள மகிந்த ராஜபக்சவை இலங்கைக்காக இந்திய தூதர் கோபால் பாக்லே நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.