1. எதிர்கால தொழில் நுட்பங்களை குறிவைக்கும் தமிழ்நாடு அரசு
தொழில் துறைப் புரட்சியைப் பயன்படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. வளர்ந்துவரும் துறைகளான மின்வாகனங்கள், சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
2. IND VS SL: இலங்கை 275 ரன்கள் குவிப்பு, இந்தியா மோசமான தொடக்கம்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சாரித் அசலங்கா ஆகியோரின் அரை சதத்தால் இலங்கை அணி 275 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி 12 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
3.விண்வெளிக்குச் சென்ற அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்: வெறும் 10 நிமிடமே!
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் உள்ளிட்ட நால்வர் 10 நிமிட பயணமாக விண்வெளிக்குப் பயணப்பட்டுள்ளனர்.
4. TNPL 2021: சென்னை vs திருப்பூர்; சென்னை பந்துவீச்சு
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
5. கான்பூரில் இத்தனை லட்சாதிபதிகளா? - மிரண்டுபோன வருமானவரித் துறை
தெளிவான விசாரணைக்குப் பிறகு வரி ஏய்ப்பு செய்து சொத்துக் குவித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
6. மத்திய அரசுப் பணிகளில் காவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய ஆயுதப் படை, என்ஐஏ, எஸ்.எஸ்.எஃப். காவலர் தேர்வுகளுக்குத் தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்க மத்தியப் பணியாளர்கள் தேர்வாணையம் அழைப்புவிடுத்துள்ளது.
7. தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே!
தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
8. ரியோவின் 'கண்ணம்மா என்னம்மா' இசை ஆல்பம் டீசர் அவுட்!
சென்னை: ரியோ ராஜ் - பவித்ரா லட்சுமி இணைந்து நடித்துள்ள 'கண்ணம்மா என்னம்மா' இசை ஆல்பம் டீசர் வெளியாகியுள்ளது.
9. சசிகலா அதிமுகவை தனது குடும்பம் எனக் கூறுவது நகைப்பிற்குரியது - ஜெயக்குமார்
அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத சசிகலா, அதிமுகவை தனது குடும்பம் எனக் கூறுவது நகைப்பிற்குரியது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
10. ராகுலின் சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்வதால் பாஜகவுக்கு லாபம் கிடையாது - குஷ்பு
பெகாசஸ் வைரஸ் மூலம் ராகுல் காந்தியின் சமூக வலைதளப் பக்கம் ஹேக் செய்வதால், பாஜகவிற்கு எந்த ஒரு லாபமும் கிடையாது என தனது ட்விட்டர் பக்கம் ஹேக்செய்யப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த நடிகை குஷ்பு தெரிவித்தார்.