ETV Bharat / state

அதிமுக பிரமுகரின் தந்தை வீட்டில் அதிரடி சோதனை - எஸ்.பி. வேலுமணி ரெய்டு

சென்னை எம்ஜிஆர் நகரில் அதிமுக நிர்வாகியின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர்.

அதிமுக
அதிமுக
author img

By

Published : Aug 17, 2021, 2:13 PM IST

சென்னை எம்ஜிஆர் நகர் வள்ளல் பாரி தெருவில் அதிமுக நிர்வாகி வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் 13 மணி நேரம் சோதனை நடத்தினர். இச்சோதனையில் 11 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெற்றிவேல் அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை விருகம்பாக்கம் பகுதி துணைச் செயலாளராக இருந்துவருகிறார். வெற்றிவேலின் தந்தை துலுக்கானத்தம் வீடு எம்ஜிஆர் நகர் சூளைபள்ளம் முத்துராமலிங்கம் தெருவில் உள்ளது.

அந்த வீட்டில் இன்று காலை ஏழு மணியிலிருந்து காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இருவர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில் செப். 13இல் தேர்தல்: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த திமுக!

வெற்றிவேல் வீட்டில் நேற்று கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுவருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டிற்கு முன்புதான் வெற்றிவேல் தனது குடும்பத்தினருடன் எம்ஜிஆர் நகர் வள்ளல் பாரி தெருவில் உள்ள புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார். அதற்கு முன்பு சூளைப்பள்ளம் வீட்டில்தான் அவர் வசித்துவந்துள்ளார்.

இந்த வீட்டின் சாவி நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோதனையில் கிடைக்கவில்லை. இன்று காலை சோதனை முடியும்போது கிடைத்ததால் தற்போது சோதனை நடத்தப்பட்டுவருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அப்போ அணில்; இப்போ பாம்பு? - செந்தில்பாலாஜி எடுத்த நாக அஸ்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.