ETV Bharat / state

உதயநிதி கைது: திமுக பொதுச்செயலாளர் கண்டனம் - dmk youth wing

சென்னை: தடையை மீறி பரப்புரை மேற்கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 Durai Murugan - strongly condemn arrest of Udayanithi

author img

By

Published : Nov 20, 2020, 7:04 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரைப் பயணத்தை திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தொடங்கியது.

இதன் தொடக்கமாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருக்குவளையிலிருந்து தனது பரப்புரையைத் தொடங்கினார். மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக அரசு, உதயநிதியை கைது செய்துள்ளது.

பரப்புரை பயணத்தை தொடங்கிய இடத்திலேயே மறித்த அதிமுக அரசின் அராஜக போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய்,அரசு நிகழ்ச்சி,ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு.

திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் கரோனா கட்டுப்பாட்டுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்த பரப்புரை பயணம் நிற்காது.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திமுகவின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனநாயக உரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக் கருத்தில் வைத்து பரப்புரைப் பயணத்துக்கான முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.