சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றும் (நவ. 5) வரும் 10ஆம் தேதியும் ரேசன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொது மக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் இருக்க ஏதுவாக பொருட்களின் இருப்பை சரிபார்க்குமாறு அந்தந்த கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகளில் தங்கு தடையின்றி வாங்குவதற்கு ஏதுவாக இன்று (நவ. 5) வழக்கம் போல் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி மாணவர்களின் அதிநவீன தொழில்நுட்ப கண்காட்சி..!
இதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் ரேசன் கடைகள் திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கு மாறும் கடை பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.