கரோனா பெருந்தொற்றால் தமிழ்நாடு முழுவதும் பேருந்து இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டும் அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி இன்று (ஏப்ரல். 10) சென்னை மாநகரப் பேருந்து இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து சென்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது, "சென்னையில் மாநகரப் போக்குவரத்தின் சார்பில் ஏற்கெனவே 2,790 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்றால் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் சேர்த்து மொத்தம் 3,190 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து ஊழியர்கள், பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் குறைவான பயணிகள் பயணம் செய்தனர். திங்கள்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும்.
அன்றைய தினம் மாநகரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க முகக்கவசம் கட்டாயம்!