காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தைப் பார்வையிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளனர். இதனையடுத்து மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை விமான நிலையம் முதல் கத்திபாரா வரை, கத்திபாரா முதல் சின்னமலை வரை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அக்டோபர் 11ஆம் தேதி பெருங்களத்தூரிலிருந்து பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை மதுரவாயில் வழியே வாகனங்கள் மாற்றிவிடப்படும் என்றும், அதே நாளில் நண்பகல் 3.30 மணி முதல் 4.30 வரை ஜிஎஸ்டி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள், 100 அடி சாலை வழியே திருப்பி விடப்படும் என்றும், நண்பகல் 2 மணி முதல் 9 மணி வரை ஈசிஆர் செல்லும் வாகனங்கள் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் 12ஆம் தேதி காலை 7.30 மணி முதல் நண்பகல் 2 மணிவரை, ஓஎம்ஆர் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பெரும்பாக்கம் வழியாக மாற்றி அனுப்பப்படும் என்றும் கூறப்படுள்ளது.
மேலும் மேற்கண்ட சாலைகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உள்ளிட்டவைகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து 11,12 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனரக, சரக்கு, இலகு ரக, டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேல், குறிப்பிட்டுள்ள சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளிக்க வேண்டும்'- முதலமைச்சர்