முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியை துபாய் நாட்டின் தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டனர். முதலமைச்சரை சந்தித்த பின் துபாய் முதலீட்டு நிறுவனப் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சுதேஷ் அகர்வால், "முதலமைச்சர் துபாய் வந்திருந்தபோது பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதுகுறித்து, முதலமைச்சரை சந்தித்துப் பேசினோம். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.
மற்றொரு பிரதிநிதியான ஸ்ரீப்ரியா குமாரியா கூறுகையில், இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெரும்வகையில் திறன் வளர்த்தல், கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட 4 விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றார்.
மேலும், ரூ.3,500 கோடிக்கு 6 ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு, அதில் 9 நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிலம் தேர்வு, மூன்று மாதங்களில் நிறைவுபெறும். இதன் மூலம் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்? தமிழ்நாடு மருத்துவத் துறையில் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!