இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகக் காணப்படும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.