மதுபோதையில் இளைஞர் ரகளை அதிர்ச்சியில் மக்கள் - violence
குரோம்பேட்டை அருகே ஜிஎஸ்டி சாலையில் மதுபோதையில் ஒரு இளைஞர், அங்கு சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
சென்னை: பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை காவல் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில், ஒரு இளைஞர் மது போதையில் அங்கு சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசுவது, வாகனத்தை தடுத்து நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல்களை செய்தார்.
போதையில் இளைஞரின் ரகளை
இதையடுத்து போதையில் இருந்த இளைஞர், திடீரென தனது கால்சட்டையிலிருந்த பையிலிருந்து பிளேடு ஒன்றை எடுத்தார்.
பின்னர் அதனை வைத்து தன்னைத் தானே அறுத்துக்கொண்டு வாகனங்களை மறித்தார். இதனால் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விசாரணை
உடனடியாக இச்சம்பவம் குறித்து போக்குவரத்து காவல் துறையினர், குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், போதையில் இருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.
போதையில் இருந்தவர், குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டு கதவை உடைத்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை