ETV Bharat / state

மதுபோதையில் அட்டூழியம்; தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய வழக்கறிஞர் - தீபாவளி

தீபாவளியன்று குடிபோதையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை தட்டிக்கேட்க சென்ற காவலரை தாக்கிய வழக்கறிஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொய்யா தோப்பில் காவலரை தாக்கிய வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது

author img

By

Published : Oct 26, 2022, 3:07 PM IST

சென்னை: எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலாஜி (30). இந்நிலையில் தீபாவளி நாளன்று புதுப்பேட்டையில் உள்ள கொய்யா தோப்பு பகுதியில் சிலர் குடிபோதையில் இடைவிடாமல் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு எழும்பூர் காவல் நிலைய காவலர்கள் கார்த்திகேயன், பாலாஜி, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட காவலர்கள் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் புதுப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. அப்போது அருகில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த மேலும் இரு நபர்கள் போலீசாரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் செல்வம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட ஜெயபிரகாஷை ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட, காவலர் பாலாஜி தனது இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட முற்பட்டார்.

அப்போது குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரும் தீடிரென காவலர் பாலாஜியை வழிமறித்து கையால் அடித்தும், காலால் வயிற்றில் எட்டி உதைத்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதைக்கண்ட மற்ற காவலர்கள் ரோந்து வாகனத்தை நிறுத்தி காவலர் பாலாஜியை மீட்டு அவரை தாக்கிய மற்ற இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையில் ரோந்து வாகனத்திலிருந்து ஜெயபிரகாஷ் தப்பியோடினார். காயமடைந்த பாலாஜி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், காவலரைத் தாக்கிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலரைத் தாக்கிய இருவர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான விக்னேஷ் (26) மற்றும் கடந்த மாதம் சட்டப் படிப்பை முடித்துள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்த முத்துகுமார் (26) என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அவ்விருவர் மீதும் ஆபாசமாகப் பேசுதல், கொடுங்காயம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய ஜெயபிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் ராகவேந்திரர் கோயில் சிலைகள் கொள்ளை வழக்கு... 2 பேர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.