ETV Bharat / state

வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்பனை: 3 பேர் கைது - போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

chennai vannarapettai drug seller arrest  drug seller arrest in vannarapettai  chennai news  chennai latest news  வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது  போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது  சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்றவர் கைது
3 பேர் கைது
author img

By

Published : Jul 19, 2021, 1:30 PM IST

சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வண்ணாரப்பேட்டை பகுதியில் பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த சன்னு என்கிற அப்துல் அமித் (21), டிபிகே தெருவைச் சேர்ந்த அல்லா பகேஸ் (20), கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த அருண் (23), பாபு ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

உடனடியாக சீனிவாசபுரம் பகுதியில் பதுங்கியிருந்த சன்னு, அல்லா பகேஸ், அருண் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா, ஒரு கிலோ 110 கிராம் போதை மாத்திரை, ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள பாபுவை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நபர்: மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.