ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பவுடர் பறிமுதல்! - The woman was questioned on suspicion

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதைப்பவுடர் சுங்க இலாகா அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதை பவுடர் பறிமுதல்!

author img

By

Published : Oct 3, 2022, 10:04 PM IST

சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்தனர்.

விமானத்தில் வந்த உகாண்டா நாட்டைச்சேர்ந்த நம்பீரா நோலின்(28) என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அலுவலர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப்பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்ததில் அப்போது பையில் விலையுர்ந்த போதைப்பவுடர் மறைத்து வைத்திருந்ததைக்கண்டு பிடித்தனர்.

இவரிடம் 1 கிலோ 756 கிராம் மெத்தகுலோன், 1 கிலோ 431 கிராம் ஹெராயின் இருந்தது. மொத்தமாக ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் கொக்கைன் போதைப் பவுடரை பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தி வந்த உகாண்டா நாட்டைச்சேர்ந்த பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் யாருக்காக கடத்தி வந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கர்ப்பத்தை தொப்பை என நாடகமாடிய சிறுமி - எட்டு மாதத்தில் வெளிவந்த உண்மை... இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.