ETV Bharat / state

ஒரே மாதத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.3 கோடி அபராதம் வசூல்! - Chennai Police

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை தாரை வார்க்காதீர்கள்.. குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ரூ.3 கோடி அபராதம் வசூல்!

author img

By

Published : Feb 20, 2023, 12:01 PM IST

சென்னை: சென்னை மாநகர காவல் துறை, விபத்தைக் குறைக்கும் வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமலாக்கம் செய்து, சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும்.

எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு அபராதத் தொகை 10,000 ரூபாயாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தொகை அதிகமாக இருப்பதால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. மேலும் 7,667 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள போக்குவரத்து அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில் கடந்த பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை, அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவாகச் சென்னை போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 600 பேர் ஆஜராகி, அவர்களது நிலுவை வழக்குகளின் அபராதங்களை இணையதளம் மூலம் செலுத்தினர்.

மேலும் பலர், அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும் இந்த அழைப்பு மையங்களிலிருந்து சேகரித்தனர்.

இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 855 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராதத் தொகையாக 8 கோடியே 81 லட்சத்து 7,000 ரூபாய் செலுத்தி உள்ளனர். அதேநேரம் கடந்த மூன்று வாரங்களில் அழைப்பு மையங்களின் இதேபோன்ற நடவடிக்கைகளால் 2,521 வழக்குகள் தீர்க்கப்பட்டு, அதன் மூலம் 2 கோடியே 61 லட்சத்து 21,500 ரூபாய் அபராதத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையிலிருந்த 3,376 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, 3 கோடியே 49 லட்சத்து 38,500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளின் தீர்வு காண்பதற்காகப் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராகச் செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.