ETV Bharat / state

திராவிடம் திராவிடம் என்கின்றனர்; என்ன திராவிடம்? - பாரதிராஜா உணர்ச்சிபொங்க பேச்சு! - Srilanka

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பெயரைச் சொல்லி என்னை திட்டினார்கள் என்றும், திராவிடம் திராவிடம் என்கின்றனர். ஆனால், என்ன திராவிடம்? என இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.

திராவிடம் திராவிடம் என்கின்றனர்; என்ன திராவிடம்? - பாரதிராஜா உணர்ச்சிப்பொங்க பேச்சு!

author img

By

Published : May 31, 2022, 10:21 PM IST

சென்னை: புகழ்பெற்ற எழுத்தாளர் ம.தொல்காப்பியனின் நூல்கள் வெளியீட்டு விழா இன்று (மே 31) நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது, “என் இனிய தமிழ் மக்களே என்கிறேன். ஆனால், பேண்ட் சட்டை அணிகிறேன். எனது உடை முக்கியமல்ல. என் மக்களோடு சார்ந்து வாழ்ந்த வாழ்க்கை முறைதான் எனக்கு முக்கியம்.

நான் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. என் மக்களை, மண்ணை, ஊர்க்கிழவிகள் சொன்னக் கதைகளை கேட்டுத்தான் இங்கு வந்தேன். ஈழத்தில் கொத்துகொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தனர். குரல் கொடுக்க ஆளில்லை. திராவிடம் திராவிடம் என்கின்றனர். என்ன திராவிடம்? நம் ரத்த உறவுகளுக்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் யாரும், ஏன் தமிழ்நாட்டில்கூட முழுமையாக கண்ணீர்விடவில்லையே என்ற கோபம் எனக்கு இருந்தது.

திராவிடம் திராவிடம் என்கின்றனர்; என்ன திராவிடம்? - பாரதிராஜா உணர்ச்சிபொங்க பேச்சு!

நான், இளையராஜா, வைரமுத்து எங்களின் வருகைக்குப் பின் தான் தமிழ் சினிமாவின் மொழி மாறியது. இவர்கள் எல்லாம் உள்ளே வந்துவிட்டார்கள் என்று, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பெயரைச் சொல்லி எங்களைத் திட்டினார்கள். நாங்கள் வந்த பிறகுதான் தமிழ் சினிமாவில் பல தடைகளை தகர்த்தோம். இந்த தடையை உடைத்ததற்கு, இப்போது பெருமையாக உள்ளது” என்று உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா சதாபிஷேக விழாவில் யுவன் 'ஆப்சென்ட்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.