ETV Bharat / state

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு - சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்

அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
author img

By

Published : Aug 4, 2021, 11:09 AM IST

Updated : Aug 4, 2021, 12:11 PM IST

11:04 August 04

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், உள்ளிட்டோரை கைது செய்தனர்.

மேலும் என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அரசு தரப்பு சாட்சி ஆனார். 

விசாரணை

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண , ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில்,  (ஆகஸ்ட் 2)தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்திருந்தார். 

தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது,  குற்றஞ்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று (ஆகஸ்ட் 4) அறிவிக்கபடும் என நீதிபதி அல்லி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

தீர்ப்பு

இருதரப்பு வாத, பிரதிவாதங்கள் முடிந்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார்.

அரசுதரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி,தண்டனை விவரம் பற்றி பிற்பகலில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்

இதையும் படிங்க :நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: தீவிரம் காட்டும் அதிமுக!

Last Updated : Aug 4, 2021, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.