ETV Bharat / state

ராமதாஸ் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி

author img

By

Published : Jul 25, 2021, 1:25 PM IST

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் பிறந்தநாள்
ராமதாஸ் பிறந்தநாள்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று (ஜூலை 25) தனது 83ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 25) காலை ராமதாஸை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டில்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

மோடி வாழ்த்து
மோடி வாழ்த்து

இதனைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமதாஸை தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தார்.

அமித் ஷா வாழ்த்து
அமித் ஷா வாழ்த்து

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராமதாஸை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் ராமதாஸ், 'உங்கள் தந்தை கலைஞர், என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

மருத்துவர் அய்யாவை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்' என வாழ்த்தினார்.

இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமதாஸின் 82ஆவது பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.