சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 150 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன்கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ஒன்றிய அமைச்சர்களிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டிற்குப் போதிய தடுப்பூசி வழங்க வலியுறுத்தியுள்ளோம்.
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை குத்தகைக்கு தரக்கோரியது குறித்த ஒன்றிய அரசின் எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை.
ஒன்றிய அரசின் தடுப்பூசிக் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றமே விளக்கம் கேட்டுள்ளது. மேலும் இன்னும் இரண்டு நாள்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பு உள்ளன. ஒன்றிய அரசு வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : இந்திய கரோனாவுக்குப் புதிய பெயர்!