ETV Bharat / state

அன்புமணி மகள் திருமண வரவேற்பு - முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவருக்கு நேரில் அழைப்பு - cm stalin

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மகள் சங்கமித்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சருக்கு அழைப்பு
முதலமைச்சருக்கு அழைப்பு
author img

By

Published : Sep 8, 2021, 2:06 PM IST

சென்னை: பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் - சௌமியா ஆகியோரின் மகள் சங்கமித்ரா. இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூர் தனசேகரன் - கலைவாணி ஆகியோரின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் செப். 1 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. தனது பேத்தியின் திருமணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை ஏற்றி நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் செப்.13 ஆம் தேதி நடைபெற இருக்கும் தனது மகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அன்புமணி ராமதாஸ் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.

முதலமைச்சருக்கு அழைப்பு

அதைத்தொடர்ந்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அன்புமணி அழைப்பு விடுத்தார்.

அப்போது பாமக மாநிலத் தலைவர் ஜி.கே மணி, துணைப் பொதுச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு  அழைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

இதையும் படிங்க: முதலமைச்சர் மதநல்லிணக்கம் பேசுகிறார் ஆனால்... நயினார் நாகேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.