ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14ஆம் தேதி முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம்

author img

By

Published : Jul 12, 2022, 7:55 PM IST

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் நகல்களை 14ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14ஆம் தேதி முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14ஆம் தேதி முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம்

சென்னை: அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் நடைபெற்ற பொது தேர்வினை எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 14ஆம் தேதி மதியம் 12 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தால் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இரண்டு நகல்கள் எடுத்து ஜூலை 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுக் கூட்டல் மற்றும் மறு மதிப்பிற்கான கட்டணத்தையும் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுக்கூட்டல் அறநிலையில் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணங்களை செலுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி; பணிகளை துரிதப்படுத்த ஸ்டாலின் அறிவுறுத்தல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.