ETV Bharat / state

எதிர்க்கட்சிகளிடம் பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது: துரைமுருகன் பேச்சு

சென்னை: எதிர்க்கட்சிகளிடம் அரசு பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும், நாங்கள் குற்றம் குறைகளைதான் செல்வோம் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Don't expect appreciation from opponent party - Duraimurugan speech

author img

By

Published : Jan 8, 2020, 4:14 PM IST

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் பேசிய பூந்தமல்லி தொகுதி திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி, எனது தொகுதியில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் இறந்திருக்கிறார்கள். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் டெங்கு காய்ச்சலால் யாருமே இறக்கவில்லை என சொல்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாலும், அரசு கணக்கில் வருவதில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலால் இறந்தாலும் அரசு கணக்கில் வருவதில்லை என்றால் எப்படி அரசுக்கு மக்களை பற்றித் தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் சிறப்பாக உறுப்பினர் பேசுகிறார். சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்திருக்கின்றன, அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியும், இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத உறுப்பினர், குற்றம் குறைகள் இருக்கிறதா என தேடிப்பார்த்துப் பேசுகிறார் என்றார்.

இதற்கு குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் லாலி பாடுவதற்கு பேரவைக்கு வரவில்லை. எதிர்க்கட்சிகளிடம் அரசு பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது. நாங்கள் குற்றம் குறைகளைதான் சொல்வோம் என்று தெரிவித்தார்.

மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அண்ணா கூறியதாக தெரிவித்தார்.

இதற்கு, மலருக்கு மணம் இருந்தால் பரவாயில்லை. காகித பூவாக இருந்தால் என்ன செய்வது என துரைமுருகன் பேசியதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Intro:Body:
எதிர்க்கட்சிகளிடம் பாராட்டுகளை எதிர்பார்க்கக்கூடாது:

துரைமுருகன் பேச்சு!

எதிர்க்கட்சிகளிடம் அரசு பாராட்டுக்களை எதிர்பார்க்கக் கூடாது என்றும், நாங்கள் குற்றம் குறைகளை தான் செல்வோம் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பூந்தமல்லி தொகுதி திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி, தனது தொகுதியில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பலர் இருந்திருக்கிறார்கள் என்றும், ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் டெங்கு காய்ச்சலால் யாருமே இறக்கவில்லை என சொல்கிறார் என குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாலும் அரசு கணக்கில் வருவதில்லை; தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு காய்ச்சலால் இறந்தாலும் அரசு கணக்கில் வரவில்லை என்றால் எப்படி அரசுக்கு தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் சிறப்பாக உறுப்பினர் பேசுகிறார் என்றும், சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன , இந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்திருக்கின்றன, அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியும், இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும், இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத உறுப்பினர் குற்றம், குறைகள் இருக்கிறதா என தேடிப் பார்ப்பது பேசுகிறார் என்றும். குறிப்பிட்டார்.

இதற்கு குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அண்ணா எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது நாங்கள் லாலி பாடுவதற்கு பேரவைக்கு வரவில்லை என்றும், எதிர்க்கட்சிகளிடம் பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும், நாங்கள் குற்றம் குறைகளை தான் சொல்வோம் என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் எங்களிடம் பாராட்டுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும், குற்றம் குறைகளைத்தான் கூறுவோம் என்றும் தெரிவித்தார்.

மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அண்ணா கூறியதாக தெரிவித்தார்.

இதற்கு, மலருக்கு மணம் இருந்தால் பரவாயில்லை; காகித பூவாக இருந்தால் என்ன செய்வது என துரைமுருகன் பேசியதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.