ETV Bharat / state

"ஆளுநரை தாக்கி பேசக் கூடாது" - திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்! - திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சட்டப்பேரவை சம்பவம் தொடர்பாக ஆளுநரை திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், ஆளுநரை தாக்கி பேசக் கூடாது என திமுக எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

dont
dont
author img

By

Published : Jan 10, 2023, 2:20 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று(ஜன.9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது உள்ளிட்ட சொற்களை தவிர்த்திருந்தார். அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என்றும், அவர் உரையில் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னதாகவே பேரவையில் இருந்து கிளம்பினார். முதலமைச்சர் உரை நிகழ்த்தும் பொழுது ஆளுநர் பாதியில் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஆளுநர் தனது உரையில் தமிழ்நாட்டின் நலம் சார்ந்த பல சொற்களை புறக்கணித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் ஆளுநரை சட்டப்பேரவையில் அவமானப்படுத்தியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் நடந்த இந்த சம்பவத்தின் எதிரொலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் getoutravi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதில், ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் பலரும் கருத்து பதிவிட்டனர். அதேபோல், ட்விட்டரில் getoutravi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கிய அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் சென்னையில் பல இடங்களில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இந்த சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(ஜன.10) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுக்கு பல அறிவுரைகள் வழங்கியதாக தெரிகிறது.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "திமுகவினர் யாரும் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது. ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டும் செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும். ஆளுநருக்கும் நமக்கும் இருக்கும் விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். சட்டப்பேரவை நிகழ்வுகளில் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்வைப்பதற்கு தயாராகுங்கள். இந்த சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு கிடைக்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த சட்டப்பேரவை நிகழ்வில் வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: DMK: தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கத் தயாரா? வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.