ETV Bharat / state

இனி என்னைப் பார்த்து அந்த கேள்வியை கேட்காதீங்க - கமல்ஹாசன் பேச்சு - vikram

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் ரத்த தான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி இரத்ததான நிகழ்ச்சி

author img

By

Published : Jun 13, 2022, 6:46 PM IST

சென்னை: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கமல் ரத்ததான குழு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரத்ததானக் குழுவை தொடங்கி வைத்தார்.

பின்னர் மேடையில் பேசிய கமல்ஹாசன், "இனி என்னைப் பார்த்து அந்த கேள்வியை கேட்காதீர்கள். சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர் தான். 'விக்ரம்' படத்தின் வெற்றி எனக்கு இன்னொரு படிக்கட்டு, நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை. படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை. மக்களாட்சியில் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி இரத்ததான நிகழ்ச்சி
மக்கள் நீதி மய்யம் கட்சி ரத்த தான நிகழ்ச்சி

ஓட்டு எண்ணிக்கை மட்டும் அரசியல் அல்ல. ஏழையை பணக்காரராக மாற்றுவதல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் மாற்றுவது தான் அரசியல். எனக்கு வள்ளல் பட்டம் தேவை இல்லை. மனிதன் என்ற பெயர் போதும். சினிமா என் தொழில். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை.

அரசியல் வியாபாரம் இல்லை. ஆனால், அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைப் பேசினால் அவர்களுக்கு கோபம் தான் வரும். என் அரசியல் பேச்சு காரமாக இருக்கும். அதன் மூலம் மட்டுமே என்னை மிரட்ட முடியும். அதையும் செய்திருக்கிறார்கள். காலை வாரி விடுவது அல்ல, எங்கள் அரசியல்.

தடால் தடால் என்று பேசுவதை சினிமாவில் பேசிக்கொள்கிறேன். என்னைவிட சிறப்பாக அவர்களால் செய்யமுடியாது. என்னிடம் தொழில் நுட்பம் இருக்கிறது. அவர்களிடம் மேடை தான் இருக்கிறது. எனக்குப் பிடித்த இரண்டு தலைவர்களுக்கு சினிமா பிடிக்காது. ஆனால், நான் என் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை .

தொலைக்காட்சியில் சின்னத்திரைக்கு ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். குடிசைக்குள் சென்றால்தான் கோபுரத்தில் வாழ முடியும். தொலைக்காட்சிக்கு சென்றது எனக்கு அடுத்த பலமாகத்தான் தெரிகிறது. என் தொழில் தொடரும்.

சினிமாவுக்கு நடிக்க ஏன் செல்கிறீர்கள் என்று கேட்காதீர்கள், நான் செலவு செய்யப்போகும் பணம் எல்லாம் வருமான வரித்துறைக்குத் தெரியும். என் கட்சிக்கு கொடுக்கும் தொகை வருமான வரித்துறைக்குத் தெரியும். பயந்து ஒடுங்க வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்ரம் வெற்றி... கமலை வாழ்த்திய மெகா ஸ்டார்... உடனிருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.