அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.அதைத்தொடர்ந்து மே. 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமாப் பிரபலங்கள், அரசு அலுவலர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையிலான வேத பண்டிதர்கள், ஸ்டாலினின் வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.
இதையும் படிங்க:'நண்பேண்டா'- முதலமைச்சருக்கும், எம்எல்ஏ உதயநிதிக்கும் வாழ்த்து தெரிவித்த சந்தானம்