சென்னை: நொளம்பூர் ஸ்ரீராம் நகர்ப் பகுதியில் மிதுனம் என்ற பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இதனிடையே கடந்த 28ஆம் தேதி குடியிருப்பில் வசித்துவரும் விஜயலட்சுமி என்பவர் தனது வளர்ப்பு நாய் ஜெர்மன் செப்பேர்டுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்று வயது சிறுமி சரஸ்வதியை நோக்கி அந்த நாய் குரைத்தபடி சென்றது.
இதனால் அச்சமடைந்த சிறுமி அலறியடித்து ஓடியுள்ளார். உடனே நாய் தனது உரிமையாளரின் கைகளிலிருந்து நழுவி சிறுமியைத் துரத்திச் சென்று கொடூரமான முறையில் கடித்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாயை விரட்டி சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் நொளம்பூர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நாயின் உரிமையாளரான விஜயலட்சுமியை காவலர்கள் இன்று (ஜனவரி 4) கைதுசெய்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
சிறுமியை, நாய் துரத்திச்சென்று கடிப்பது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Watch Video: 2 வயது குழந்தையை தெரு நாய் கடித்த கொடூரம் - தாயின் உருக்கமான பதிவு