அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு காரசார கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட இறுதி விவாதத்தின்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "சீனாவைப் பாருங்கள் அது இழிவானது, ரஷ்யா மற்றும் இந்தியாவைப் பாருங்கள் அது அசுத்தமானது நாம் நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள நம்ப முடியாத பல்வேறு பணிகளைச் செய்துள்ளோம்" எனக் கூறினார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்திற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
-
மோடி ட்ரம்பை அழைத்து வந்து கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து கொரொனாவை கண்டுகொள்ளாமல் 'நமஸ்தே ட்ரம்ப்' நடத்தினார்.இன்று இந்தியா அசுத்தமான நாடு என்று சேறுவாரி இறைக்கிறார் ட்ரம்ப். சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா?
— Jothimani (@jothims) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மோடி ட்ரம்பை அழைத்து வந்து கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து கொரொனாவை கண்டுகொள்ளாமல் 'நமஸ்தே ட்ரம்ப்' நடத்தினார்.இன்று இந்தியா அசுத்தமான நாடு என்று சேறுவாரி இறைக்கிறார் ட்ரம்ப். சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா?
— Jothimani (@jothims) October 23, 2020மோடி ட்ரம்பை அழைத்து வந்து கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து கொரொனாவை கண்டுகொள்ளாமல் 'நமஸ்தே ட்ரம்ப்' நடத்தினார்.இன்று இந்தியா அசுத்தமான நாடு என்று சேறுவாரி இறைக்கிறார் ட்ரம்ப். சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா?
— Jothimani (@jothims) October 23, 2020
இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, "பிரதமர் நரேந்திர மோடி மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் பற்றி கண்டுகொள்ளாமல் ட்ரம்ப்பின் வருகைக்காக செலவிட்டு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆனால், அவரோ இந்தியா அசுத்தமான நாடு எனக்கூறி சேற்றை வாரி இறைக்கிறார். சீனா என்ற பெயரையே உச்சரிக்க அச்சம் கொள்ளும் பிரதமர் மோடி, ட்ரம்பின் இந்தக் கருத்துகளையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் ஹிலாரி கிளிண்டனை வம்புக்கிழுத்த ட்ரம்ப் !