ETV Bharat / state

மே.வங்கத்தில் மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை!

சென்னை: மேற்குவங்கத்தில் மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருத்துவர்கள்
author img

By

Published : Jun 15, 2019, 11:05 PM IST

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவர்களை தாக்கிய அனைவரையும் உடனடியாக மேற்குவங்க அரசு கைது செய்ய வேண்டும்.

அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவர்களுக்கு உள்ள உரிமையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொச்சைப் படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. மம்தா பானர்ஜி அரசின் மருத்துவர்கள் விரோதப் போக்கை எதிர்த்து உறுதியுடன் போராடும் அதே வேளையில், மத்திய பாஜக அரசின் அரசியல் சூழ்ச்சிகளையும் மருத்துவர்கள் புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் போராட முன்வர வேண்டும் என, போராடும் மருத்துவர்களை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:Body:மருத்துவர்களை தாக்கியவர்களை மேற்குவங்க அரசு உடனடியா கைது செய்ய வேண்டும் - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம வேண்டுகோள் விடுத்துள்ளது .

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை, ஒரு கும்பலால் கடுமையாக தாக்கியுள்ளது.இது கடும் கண்டனத்திற்குரியது.எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் செயலை மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை கைவிட வேண்டும்.மருத்துவர்களை தாக்கிய அனைவரையும் உடனடியாக மேற்கு வங்க அரசு கைது செய்ய வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவர்களுக்கு உள்ள உரிமையை மம்தா பானர்ஜி கொச்சைப் படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.

போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வுகான மேற்கு வங்க அரசு முன்வர வேண்டும்.

எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல் ,மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மேற்கு வங்க முதல்வருக்கு ,
மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக அவர் எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கான மிக முக்கியக் காரணம், அரசு மருத்துவமனைகளின் மோசமான செயல்பாடும், பொதுசுகாதாரத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்ததும் தான்.

இதற்கு மத்திய பா.ஜ.க அரசுதான் காரணம்.அதுவே இதற்கு பொறுப் பேற்க வேண்டும்.

மத்திய பா.ஜ.க அரசுகள் உருவாக்கிய, தேசிய நலக் கொள்கை 2002 மற்றும் தேசிய நலக் கொள்கை 2017 ஆகியவையே பொதுச் சுகாதாரத்துறை சீரழியக் காரணம்.

மருத்துவம் தனியார் மயமானதற்கும்,கார்ப்பரேட் மயமானதற்கும் மத்திய பா.ஜ.க அரசுகளின் மக்கள் விரோத தேசிய நலக் கொள்கைகளே காரணம்.

இந்நிலையில், தற்பொழுது மோடி அரசு நடைமுறைப் படுத்தும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் பொது சுகாதாரத்துறையை மேலும் சீரழித்துள்ளது.
ஒழித்துக் கட்டி வருகிறது.

மோடி அரசு அமைத்த குழு உருவாக்கியுள்ள,
தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவும் ,நவீன அறிவியல் மருத்துவத்தை ஒழித்துக் கட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஐ யை ஒழித்திடவும், தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவரவும்,
எக்ஸிட் தேர்வை புகுத்திடவும், மருத்துவக் கல்வியில் சமூக நீதியை ஒழித்திடும் வகையிலும் இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு கடைபிடிக்கும் மக்கள் நல்வாழ்வுக் கொள்கை கார்ப்ரேட்களுக்கு சாதகமானது.
மக்களுக்கு எதிரானது.

மத்திய பா.ஜ.க அரசும்,மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையும் இவற்றை எல்லாம் மறைக்கும் நோக்கத்துடன்,மருத்துவர்களையும் - மருத்துவ மாணவர்களையும் திசை திருப்பும் நோக்கத்துடன், மருத்துவர்களின் நாடு தழுவிய நியாயமான போராட்டத்தை தனக்கு சாதகமாக, அரசியல் உள்நோக்கத்தோடு பயன் படுத்த முயல்கிறது.

மத்திய பா.ஜ.க அரசின் இச் செயல், கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக மோடி அரசு பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.

மம்தா பானர்ஜி அரசின் மருத்துவர்கள் விரோத போக்கை எதிர்த்து உறுதியுடன் போராடும் அதே வேளையில்,மத்திய பா.ஜ.க அரசின் அரசியல் சூழ்ச்சிகளையும் மருத்துவர்கள் புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் போராட முன்வர வேண்டும் என, போராடும் மருத்துவர்களை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.