தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காகச் சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கைக்காக பொதுப்பிரிவுகளில் 30 படுக்கைகள், அவசர சிகிச்சைக்கு 20 படுக்கைகள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவில் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன .
மருத்துவர்கள் 24 நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தீபாவளியையொட்டி தீக்காயங்கள் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க கூடுதலாக ஆறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. குறைந்த அளவிலான மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், போதிய மருத்துவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் கவனமுடன் கையாள வேண்டும். கொசுக்களால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகிறது.
குழந்தை சுர்ஜித்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தைகளைப் பலிகேட்கும் ஆழ்துளைக் கிணறு! -இதுவரை...