ETV Bharat / state

காலமுறை ஊதியத்தில் பணி பாதுகாப்பு வழங்கவேண்டும் - மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

கரோனா தொற்று பணிக்கு தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர்கள் சங்கம்
மருத்துவர்கள் சங்கம்
author img

By

Published : May 22, 2021, 11:02 AM IST

Updated : May 22, 2021, 2:31 PM IST

சென்னை: கரோனா தொற்று காலத்தில், கடந்த ஓராண்டிற்கு மேலாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மிகவும் மன அழுத்ததுடன் பணியில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 20,000 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும் கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஓராண்டிற்கு மேலாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மிகவும் மன அழுத்ததுடனே பணியில் உள்ளனர்.

மேலும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவர்கள் மூச்சுதிணறலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். நோயாளிகள் மூச்சு விடுவதற்கு சிரப்படுவதை பார்க்கும் உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மருத்துவர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆறு மாதத்திற்கு 2,100 மருத்துவர்களை, மாதம் 60 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, "அரசு மருத்துவமனைகளின் சேவையே மேம்படுத்தும் வகையில் 2100 மருத்துவர்களை நியமனம் செய்வது என்பது வரவேற்புக்குரியது. தமிழ்நாடு மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. நாள்தோறும் புதிய படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. நோயாளிகள், படுக்கைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். அதனால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே எம்.ஆர்.பி., தேர்வு எழுதி முடித்து பணிநியமனத்திற்காக காத்திருக்கும் மீதமுள்ள மருத்துவர்களுக்கும் உடனடியாக பணிநியமனம் வழங்கிட வேண்டும். படித்து முடித்து வேலைக்காக ஏறத்தாழ 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை மாத ஊதியம் ரூ 60,000 கொடுத்து நியமிக்கலாம்" என கூறினார்.

டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன்

அதேபோல் ஜனநாயக டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "அரசு மருத்துவமனைகளில் 20,000 டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு 2,100 மருத்துவர்களை மாதம் 60 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்கிறது. இந்த நோய் உடனே கட்டுப்படுத்தும் நோய் கிடையாது. எனவே அவர்களுக்கு பணி பாதுகாப்புடன் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு விதிகளின் படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றுக்கு இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு!

Last Updated : May 22, 2021, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.