இதுகுறித்து, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொது சுகாதாரத்தை ஒழித்துவிட்டு தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை தனியாருக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை நடத்தும் தனியாருக்கு அதிக லாபம் வர வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கெஜெட் அறிவிப்பில், எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் மூன்று ஆண்டுகள் சிறப்பு பயிற்சி முடித்தவர்கள்தான் ரத்த பரிசோதனையில் கையொப்பம் இட வேண்டும் என்பது உள்ளிட்ட பல திட்டங்கள் வைத்துள்ளார்கள்.
கிராமங்களில் உள்ள ரத்த பரிசோதனை நிலையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்லது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு மருத்துவமனைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தினால் இந்தியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான லேப்கள் மூடப்படும். மருத்துவத்துறையை தரப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பொது சுகாதாரத்தை புறக்கணிக்க மத்திய அரசு முயல்கிறது. தரப்படுத்துதல் என்கிற வார்த்தையை பயன்படுத்தி சிறிய மருத்துவமனைகளை மூட திட்டமிடப்படுகிறது.
கிராமங்களில் குறைந்தபட்சம் 500 சதுரடி நிலத்தில் ரத்த பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என மாநில அரசு சொல்கிறது. விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. மருத்துவர்களுக்கு லேப் தொடர்பான அனுபவம் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. ரத்த பரிசோதனை மையங்களை மூட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கேரளாவில் மாவட்ட மருத்துவமனைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தம்ழிநாட்டில் அவ்வாறு தனியார் வசம் கொடுக்க மாட்டோம் என அரசு இதுவரை சொல்லவில்லை. இவையெல்லாம் நடந்தால் மக்கள் இலவசமாக மருத்துவம் பார்ப்பதில் பாதிப்புகள் ஏற்படும் என்பதே உண்மை. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் மருத்துவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.