ETV Bharat / state

ரத்தக் குழாயில் அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை! - சிறுவனுக்கு ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சை

சென்னை: அரசு மருத்துவமனையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்த சிறுவனுக்கு ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் சாதனை
author img

By

Published : Nov 11, 2019, 1:49 PM IST

திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டையைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் 16 வயதான கௌரி சங்கர். இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றும் வயிற்று வலி நிற்கவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்றார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனித உடலுக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் முக்கிய உறுப்பான மகா தமனியில் சிறிய வீக்கம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

பின்னர், சிறுவன் கௌரி சங்கருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர். சிறுவன் கௌரி சங்கருக்கு அக்டோபர் 30ஆம் தேதி மகா தமனியிலிருந்த வீக்கத்தை அகற்றி அறுவை சிகிச்சையின் மூலம் ரத்தக்குழாய் பொருத்தினர்.

சென்னை அரசு மருத்துவமனை

இது குறித்து ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, "ரத்தநாளவியல் துறைத் தலைவர் ஸ்ரீதரன், இருதய அறுவை சிகிச்சைத் துறை தலைவர் ஜோசப் ராஜ், மயக்கவியல் மருத்துவர்கள் அனுராதா, பவானி ஆகியோர் கொண்ட குழு அக்டோபர் 30ஆம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது மகா தமனியில் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது.

சிறுவனுக்கு வயிற்றில் உள்ள பெரிய ரத்தக் குழாயான மகா தமனியின் முக்கியமான பகுதியில் சிறிய பந்து அளவிற்கு வீக்கம் ஏற்பட்டு வெடிக்கின்ற நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு சிறுவன் வந்தார். தற்போது அவர் முழுவதும் குணமடைந்துவிட்டார். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - அரசு மருத்துவமனையில் அவலம்!

Intro:ரத்த குழாயில் அறுவை சிகிச்சை
அரசு மருத்துவர்கள் சாதனை

Body:ரத்த குழாயில் அறுவை சிகிச்சை செய்து
அரசு மருத்துவர்கள் சாதனை

சென்னை,
சென்னை அரசு மருத்துவமனையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பழைய கோட்டையை சேர்ந்த மணியின் மகன் 16 வயதான கௌரி சங்கர். இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்று வலியின் காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு பெற்றும் வலி நிற்கவில்லை. அதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி சிகிச்சை பெற வந்துள்ளார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனித உடலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய உறுப்பான மகா தமனியில் சிறிய வீக்கம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சிறுவன் கௌரி சங்கருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
சிறுவன் கௌரி சங்கருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி மகா தமனியில் இருந்த வீக்கத்தை அகற்றி அறுவை சிகிச்சை செய்தனர். மகா தமனியில் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தி உள்ளனர். சிறுவன் தற்போது நான்றாக குணமாகி உள்ளார்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வருமான ஜெயந்தி கூறும்போது, சிறுவன் கௌரிசங்கர் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மகா தமனியின் வீக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து ரத்தநாள வியல் துறை தலைவர் ஸ்ரீதரன், இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜோசப் ராஜ், மயக்கவியல் மருத்துவர்கள் அனுராதா, பவானி ஆகியோர் கொண்ட குழு கடந்த 30ம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மகா தமனியில் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு வயிற்றில் உள்ள பெரிய ரத்தக் குழாயான மகா தமனியின் முக்கியமான பகுதியில் சிறிய பந்து அளவிற்கு வீக்கம் ஏற்பட்டு வெடிக்கின்ற நிலையிலும்,உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு வந்தார்.
தற்போது அவர் முழுவதும் குணமடைந்து விட்டார். தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.