சென்னை: சவுதி அரேபியாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (ஜூன்.19) காலை சென்னை வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர் பயணித்தார். அவருடைய இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் 45 வயது ஆண் பயணி ஒருவர் அமர்ந்திருந்தார்.
அந்த ஆண் பயணி சவுதி அரேபியாவில் டாக்டராக பணியாற்றுகிறார். அதோடு அவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, டாக்டர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாகச் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் விமானத்திலேயே கூச்சல் போட்டு, விமான பணிப்பெண்களிடமும் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, அவர்கள் விமானியிடம் தெரிவித்தனர். அதோடு அந்த ஆண் பயணியை, விமான பணிப்பெண்கள் கடுமையாக எச்சரிக்கவும் செய்தனர். இந்த நிலையில் விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அந்தப் பெண் பயணி விமான ஊழியர்களின் உதவியுடன், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகாா் செய்தார்.
இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் தூக்கத்தில் தெரியாமல் என் கை பட்டு விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார். இதையடுத்து அந்த டாக்டரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, போலீசில் அளித்த புகாரை திரும்பப் பெற்றார். இதையடுத்து 2 பேரும் சமரசமாக போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் கஞ்சா ஆர்டர் செய்து விற்பனை - பொறியியல் பட்டதாரி மூவர் கைது