சென்னை: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் ரவிராஜ் ராவ் (61). இவர் தனது மனைவியுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பெங்களூருவிலிருந்து சென்னை வந்தார்.
கேட் எண் 2 நோக்கி வந்தபோது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதில் அவருடைய பின்தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவசர முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதோடு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காவல் துறையினர் ரவிராஜ் ராவ் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மருத்துவர் உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்